மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு இன்று கொரோனா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் 4 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவர். இதுதவிர தானே (1), புனே (1), புனே மாநகராட்சி பகுதி (7) மற்றும் நாக்பூர் (1) ஆகிய பகுதிகளில் பதிவாகி உள்ளன.
இதனால், இந்த ஆண்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,547 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
Update: 2025-07-03 13:59 GMT