குஜராத் விமான விபத்து: இன்று அறிக்கை விவரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
குஜராத் விமான விபத்து: இன்று அறிக்கை விவரம் வெளியாக வாய்ப்பு
275 பேர் உயிரிழந்த அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை விவரம் இன்று (ஜூலை11) வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் விமான விபத்துக்கான காரணம் என்ன என்ற விவரம் வெளியாக வாய்ப்புள்ளது. முதல்முறையாக கறுப்பு பெட்டியில் உள்ள தரவுகள் இந்தியாவிலேயே பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-07-11 05:30 GMT