கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025

கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழர் விரோத போக்கைத் துளியும் நியாய உணர்வு இல்லாமல் கையாண்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு எனது வன்மையான கண்டனங்கள். கீழடி விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்களின் தொன்மையை மூடிமறைக்க உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினார்.

கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டு மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கின்றார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Update: 2025-07-11 05:42 GMT

Linked news