கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் கைது - டிஜிபி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025

கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் கைது - டிஜிபி விளக்கம்

தமிழ்நாடு டிஜிபி ஷங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க ஆபரேஷன் அறம் நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி டெய்லர் ராஜா 30 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி உள்ளார். கர்நாடகாவில் பதுங்கியிருந்த டெய்லர் ராஜாவை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-07-11 06:36 GMT

Linked news