நன்றி மறந்தவர் வைகோ.. மதிமுகவுக்கு அங்கீகாரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
நன்றி மறந்தவர் வைகோ.. மதிமுகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது அம்மா - ஜெயக்குமார்
ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வைகோவை தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிக்கும். ஆனால் நன்றி மறந்தவர் வைகோ. அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு தான் மதிமுகவுக்கு அங்கீகாரமே கிடைத்தது. எல்லாவற்றையும் மறந்து விட்டு மறைந்த தலைவரை இழிவுபடுத்துவது அழகல்ல” என்று ஜெயக்குமார் கூறினார்.
Update: 2025-07-11 07:51 GMT