பைக்-டாக்சி ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
பைக்-டாக்சி ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை?
வணிக நோக்கத்திற்காக (பைக்-டாக்சி) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை இன்று முதல் ஆய்வு செய்து மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோட்டார் வாகன விதியை மீறி இருசக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Update: 2024-12-11 02:48 GMT