வண்டலூர் அருகே அதிர்ச்சி.. 18 சிறுமிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
வண்டலூர் அருகே அதிர்ச்சி.. 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் பழனி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரில் வண்டலூர் மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Update: 2025-07-12 05:26 GMT