பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை - தமிழக வெற்றிக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை - தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்
பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள தகவல்படி, “மக்களால் வெறுக்கப்படும் பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மட்டுமே கூட்டணி. விஜய் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் உறுதி. செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் எப்போதும் மாற்றமில்லை” என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி என அமித்ஷா சூசகமாக கூறிய நிலையில் தவெக இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
Update: 2025-07-12 06:45 GMT