ஆசிய கோப்பை: பாகிஸ்தான் - ஓமன் அணிகள் இன்று... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
ஆசிய கோப்பை: பாகிஸ்தான் - ஓமன் அணிகள் இன்று பலப்பரீட்சை
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் இன்று நடைபெறுகின்ற 4-வது லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுக்கும் இந்த தொடரில் இது முதல் ஆட்டம் என்பதால் வெற்றியுடன் தொடங்க போராடும். எனவே இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-09-12 03:40 GMT