‘ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

‘ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்’ - நேபாள முன்னாள் பிரதமர்


நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் என தகவல் வெளியான நிலையில், தான் தற்போது வடக்கு காத்மாண்டுவில் உள்ள நேபாள ராணுவத்தின் ஷிவ்புரி முகாமில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக சர்மா ஒலி, இந்து கடவுள் ராமரின் பிறப்பிடம் குறித்து சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை என்றும், அவர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்றும் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Update: 2025-09-12 05:35 GMT

Linked news