கொழுப்பைக் குறைத்தால் கோடீஸ்வரர் ஆகலாம்:... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
கொழுப்பைக் குறைத்தால் கோடீஸ்வரர் ஆகலாம்: ஊழியர்களுக்கு சீன நிறுவனம் சலுகை
கொழுப்பை குறைக்கும் அதாவது. உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் போனஸ் அளிக்கப்படும் என்று சீன நிறுவனம் அறிவித்துள்ளது. குறைக்கும் ஒவ்வொரு அரை கிலோவிற்கும் சுமார் ரூ.6 ஆயிரம் சன்மானம் அறிவித்துள்ளது.
சவாலில் வென்ற பிறகு, மீண்டும் எடை கூடினால் ஒவ்வொரு அரை கிலோ எடைக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுமாம். ஊழியர்கள் மத்தியில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இன்ஸ்டா 360 என்ற நிறுவனம் இந்த சவாலை தொடங்கியுள்ளது. சீன நிறுவனம் அறிவித்துள்ள இந்த சவால் குறித்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Update: 2025-09-12 06:24 GMT