சென்னையில் கடத்தப்பட்ட அரசு பஸ் ஆந்திராவில் மீட்பு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
சென்னையில் கடத்தப்பட்ட அரசு பஸ் ஆந்திராவில் மீட்பு
சென்னை கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றார். கடத்தப்பட்ட பஸ் ஆந்திராவின் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
பஸ்நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்துவந்தநிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த பஸ்சை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர போலீசார் கொடுத்த தகவலின் பேரில், நெல்லூர் சென்று பஸ்சை மீட்டதுடன், பஸ்சை ஓட்டி சென்ற ஒடிசாவை சேர்ந்த நபரையும் கைது செய்தனர்.
Update: 2025-09-12 06:36 GMT