கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து


சாகர் ராணா கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்தது

ஒரு வாரத்திற்குள் சரணடைய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுஷில் குமாரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சாகர் ராணாவின் தந்தை தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அடிதடி சம்பவத்தில் சக மல்யுத்த வீரர் சாகர் ராணா (23) கொலை செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் சுஷில் குமாருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது. 

Update: 2025-08-13 07:28 GMT

Linked news