பிரசார சுற்றுப் பயணம்.. சென்னையில் இருந்து... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025

பிரசார சுற்றுப் பயணம்.. சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டார் விஜய்


தவெக தலைவர் விஜய் தனது பிரசார சுற்றுப் பயணத்தை இன்று (சனிக்கிழமை) திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.

காலை 10.35 மணியளவில் மரக்கடை, எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற உள்ள கூட்டத்தில் விஜய் பேசுகிறார். திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னையில் இருந்து தவெக தலைவர் விஜய் திருச்சி புறப்பட்டார்.

Update: 2025-09-13 03:27 GMT

Linked news