விறுவிறுப்பாகும் அரசியல் களம்... விஜய்யின் பிரசார... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025

விறுவிறுப்பாகும் அரசியல் களம்... விஜய்யின் பிரசார பயணம் திருச்சியில் இன்று தொடக்கம்


இந்த பிரசாரம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். விஜய் பிரசாரம் செய்யப்போகும் மரக்கடை பகுதி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்திய இடம். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தான் பிரசாரம் செய்தார்.

அந்தவகையில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளார். 


Update: 2025-09-13 03:29 GMT

Linked news