திருச்சியில் விஜய் தேர்தல் பரப்புரை.. கூட்ட... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
திருச்சியில் விஜய் தேர்தல் பரப்புரை.. கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மயக்கம்
தேர்தல் பரப்புரைக்காக திருச்சி வந்த தவெக தலைவர் விஜயை காண ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்த 6 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய் தனது முதல் பிரசார பயணத்தை இன்று திருச்சியில் தொடங்கியிருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நகர் முழுவதும் குவிந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இந்த சூழலில் குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி விஜய்யின் பிரசாரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Update: 2025-09-13 06:46 GMT