‘பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

‘பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்; நிச்சயம் மீண்டும் வருவேன்’ - விஜய்


தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், நேற்று திருச்சியில் தனது பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சி விஜய்யை வரவேற்க த.வெ.க. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், அங்கு விஜய் பேசுவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அரியலூரில் பேசிவிட்டு, குன்னம் பகுதியில் வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் சென்றார்

ஆனால் பெரம்பலூர் சென்றபோது நள்ளிரவு நேரமானதால் விஜய் அங்கு பேசாமல் சென்றுவிட்டார். இதனால் அங்கு அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்ற அடைந்தனர். இந்த நிலையில், பெரம்பலூரில் காத்திருந்த மக்களிடம் வருத்தும் தெரிவித்துக் கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.

Update: 2025-09-14 07:25 GMT

Linked news