கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்கள் -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1.அஞ்செட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.

2.கெலமங்கலத்தில் ரூ.12 கோடியில் சாலைகள் அமைக்கப்படும்.

3.ஓசூரில் எல்சி 104 ரெயில்வே கேட் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

4.கெலமங்கலம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்

5.ஓசூர் மாநகரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க புதிய சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

Update: 2025-09-14 08:25 GMT

Linked news