நாடாளுமன்றத்தில் ஜூலை 25ம் தேதி பதவியேற்கிறார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

நாடாளுமன்றத்தில் ஜூலை 25ம் தேதி பதவியேற்கிறார் கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு


மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர் கமல்ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-07-15 05:25 GMT

Linked news