எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு
உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலும் தனது விற்பனையை தொடங்க உள்ளது. இதற்காக மும்பையில் உள்ள தனது முதல் ஷோரூமை டெஸ்லா நிறுவனம் திறந்துள்ளது.
மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்தார். மும்பை குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே 4,000 சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது
Update: 2025-07-15 06:24 GMT