தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் , திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Update: 2025-07-15 14:40 GMT

Linked news