எண்ணை வாங்கும் விவகாரம்: இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது - அமெரிக்காவுக்கு ரஷியா பதிலடி

மாஸ்கோ,

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிபர் 50 சதவீத வரி விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப் பாட்டை எடுத்துள்ளது. அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது. ரஷியா-இந்தியா இடையேயான நீண்டகால நட்பு கலாசாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் வேரூன்றி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையோன உறவை முறிக்க முடியாது. இதற்கான எந்தவொரு முயற்சியும் தோல்வி அடையும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Update: 2025-09-15 12:52 GMT

Linked news