திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஆழ்ந்த அறிவும் தெளிவான சிந்தனையும் உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! லட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Update: 2025-08-17 04:00 GMT

Linked news