வாக்கு திருட்டுக்கு எதிரான ராகுல் காந்தியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

வாக்கு திருட்டுக்கு எதிரான ராகுல் காந்தியின் யாத்திரை - பீகாரில் இன்று தொடக்கம்


பா.ஜனதாவுடன் சேர்ந்து தேர்தல் கமிஷன் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறிய அவர், பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்த தரவுகளையும் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு எதிராக ராகுல் காந்தி தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீகாரில் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தார். 'வாக்காளர் உரிமை யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை பீகாரின் சசாரம் என்ற இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.


Update: 2025-08-17 04:05 GMT

Linked news