கவர்னர் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
கவர்னர் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில்தான்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தருமபுரி மாவட்டத்துக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நிகழ்வில் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறும் கவர்னர், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளைப் பார்த்து, பாஜக ஆளும் மாநிலங்களில் போய்தான் கம்பு சுற்ற வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக பேசிவரும் கவர்னரை வைத்து பாஜக தனது இழிவான அரசியலை செய்கிறது
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம்தான் முதலில் உள்ளது. கவர்னர் அவர்களே.. நீங்கள் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில்தான். தமிழ்நாட்டில் இல்ல. அங்க போய் கம்பு சுத்துங்க”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
Update: 2025-08-17 05:35 GMT