அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: “ஆவணங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: “ஆவணங்கள் பறிமுதல்” - அமலாக்கத்துறை தகவல்
சென்னை, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவருடைய மகன், மகள், நூற்பாலை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். இதன்படி சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன என்றும், பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-17 06:43 GMT