சாக்குப் போக்குகள் தேவை இல்லை: தேர்தல் ஆணையத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
சாக்குப் போக்குகள் தேவை இல்லை: தேர்தல் ஆணையத்தை சாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்
வாக்குத் திருட்டு விவகாரத்தில், "வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?" என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா?. வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-17 14:21 GMT