மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் 5 பெண்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் 5 பெண்கள் பலி
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் பரேலா பகுதியில் ஏக்த சவுக் என்ற இடத்திற்கருகே தொழிலாளர்கள் சிலர் சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது. விரைவாக கார் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில், அந்த கார் திடீரென தொழிலாளர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு சூர்யகாந்த் சர்மா கூறும்போது, இந்த சம்பவத்தில், 2 பெண்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் பெண்கள் ஆவர்.
Update: 2026-01-20 03:42 GMT