2வது டி20 போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
2வது டி20 போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Update: 2026-01-23 04:59 GMT