ஜல்லிக்கட்டு போட்டி: ஆன்லைன் பதிவு முறையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
ஜல்லிக்கட்டு போட்டி: ஆன்லைன் பதிவு முறையில் மாற்றம்
உள்ளூர் காளைகளும், வீரர்களும் பங்குபெறுவதை உறுதி செய்திட ஆன்லைன் பதிவு முறை மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் மாவட்ட அளவில் முடிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும் என்றும், மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது இறக்க நேரிடும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்குகிறது என்றும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் உறுதிமொழி என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், ஜல்லிக்கட்டை தொடர்ந்து ஊக்குவித்திட முதல்-அமைச்சர் வழிகாட்டுதலில் செயல்படுவோம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2026-01-23 07:48 GMT