‘தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள்’ -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
‘தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள்’ - அன்புமணி ஆவேசம்
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
“தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது. 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் ரத்து, கூட்டுறவுக் கடன் ரத்து என்று எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டார்கள். நேற்று கூட, ரூ.12 லட்சத்து 16 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வநந்துவிட்டதாக மிகப்பெரிய பொய்யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
உண்மையில் வந்தது ரூ.1 லட்சம் கோடிதான். தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள். இளைஞர்களை அழித்துக்கொண்டிருக்கின்ற தி.மு.க.வை அகற்றுங்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்.
Update: 2026-01-23 10:59 GMT