உத்தர பிரதேசம்: 5 பேரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025
உத்தர பிரதேசம்: 5 பேரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
மீரட் பகுதியில் ஜமீல் ஹூசைன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி இன்று காலை போலீசார் ஜமீல் ஹுசைனின் இருப்பிடத்தை நெருங்கியபோது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
அப்போது போலீசார் நடத்திய என்கவுன்டரில் ஜமீல் ஹூசைன் சுட்டுக்கொல்லப்பட்டார் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மற்றும் சொத்து விவகாரத்தில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜமீல் ஹுசைன் தனது உறவினர்களான 5 பேரை கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Update: 2025-01-25 08:11 GMT