கவர்னர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்தது... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26.01.2026

கவர்னர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழ்நாடு அரசு

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, கவர்னர் அளிக்கும் விருந்தில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதை கண்டித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, காங்கிரஸ், விசிக, இடதுசாரி, மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

Update: 2026-01-26 07:08 GMT

Linked news