விருத்தாசலம்: மஞ்சள்காமாலை பாதிப்பால் சிறுவன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

விருத்தாசலம்: மஞ்சள்காமாலை பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு


விருத்தாசலம் அருகே தீவளுர் கிராமத்தில் மஞ்சள்காமாலை பாதிப்பால் முத்தமிழ் நிலவன் (12) என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால் கடந்த 22ஆம் தேதி 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதால் தீவளூரில் பலருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், சுகாதாரமற்ற குடிநீர் விநியோகமென புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

Update: 2025-06-28 08:31 GMT

Linked news