ஏலகிரி மலையில் நாளை கோடை விழா நடைபெற உள்ளது. 4... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
ஏலகிரி மலையில் நாளை கோடை விழா நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து நாளை ஒரு நாள் மட்டும் கோடை விழா நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விழா காலை 10.30 மணியிலிருந்து ஏலகிரியில் உள்ள கோடை விழா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. விழாவின்போது இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள், கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா குறித்த கண்காட்சி மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்கள் ஆகியவை கண்காட்சியாகவும், விற்பனையாகவும் நடைபெறவுள்ளது.
Update: 2025-06-28 09:30 GMT