புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் உடன் பா.ஜ.க.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் உடன் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரியாக இருந்து வந்த சாய் ஜெ சரவணன் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கட்சி தலைமை உத்தரவிட்டதன் பேரில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்து உள்ளார். இதேபோன்று, புதுச்சேரி துணை நிலை கவர்னர் கைலாசநாதனை சந்தித்து இதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளார். இதுபற்றி கவர்னர் மாளிகையில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Update: 2025-06-28 12:24 GMT