குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்து போல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்து போல் ஏற்பட்டால், உடனடியாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) இன்று நடைபெற்றது. விமானம் போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி உருவம் தீப்பிடித்தவுடன் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அதனை அணைத்து, பயணிகளை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதுபோல ஒத்திகை பார்க்கப்பட்டது.
இதுவொரு ஒத்திகை நிகழ்ச்சியாக இருந்தாலும், திடீரென பார்த்தவர்களுக்கு ஏதோ விமானம் தீப்பிடித்து எரிந்துவிட்டதோ? என்று எண்ண தோன்றியது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Update: 2025-06-28 13:54 GMT