2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் - மதிமுக
2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என மதிமுக நிர்வாக குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்சியின் பொருளாளர் மு.செந்திலதிபன், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெறச் செய்ததற்கு கண்டனம், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே தொடர்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.