மகாத்மா காந்தி நினைவு தினம்: தீண்டாமை ஒழிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
மகாத்மா காந்தி நினைவு தினம்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினத்தை ஒட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றார்.
இதன்படி, “தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன்.
அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை ஆகும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Update: 2025-01-30 06:12 GMT