மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025

மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவப் படிப்புகளுக்கான மாநில இட ஒதுக்கீட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். இடஒதுக்கீடு தொடர்பான சுப்ரீம்கோட்டின் தீர்ப்பு அரசு மருத்துவர்களை பாதிக்கும். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பால் இந்த ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு இல்லை. வசிப்பிட அடிப்படையிலான இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம்.

50 சதவீத முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு மூலம் 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். சமூக நீதியை கடைபிடிப்பதில் இட ஒதுக்கீடு என்பது இன்றியமையாதது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது” என்று அவர் கூறினார். 

Update: 2025-01-30 06:28 GMT

Linked news