தந்தை-மகள் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
தந்தை-மகள் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு - போலீசார் விசாரணை
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் அழுகிய நிலையில் தந்தை மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 70 வயதான தந்தை சாமுவேல் சங்கர், 35 வயதான மகள் சிந்தியா உயிரிழந்த நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாமுவேல் சங்கருக்கு வீட்டில் வைத்து டயாலிசிஸ் சிகிச்சை பார்த்த மருத்துவர் எபினேசரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சையின்போது சாமுவேல் உயிரிழந்ததால் மகள் சிந்தியா வாக்குவாதம் செய்ததாகவும், அவரை மருத்துவர் தள்ளிவிட்டபோது உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் உயிரிழந்ததால் அச்சத்தில் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Update: 2025-01-30 06:39 GMT