கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தாலும் அதனை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை - சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி
ஐகோர்ட்டை நாட இயலாத ஏழைகள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும், கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்றும் சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
மேலும் பல வழக்குகளில் காவல்துறை, குறித்த காலத்திற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்றும். காவல்துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையே இது காட்டுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் உள்துறை செயலாளர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
Update: 2025-01-30 07:13 GMT