இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இரு தரப்பிலும் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.
இதன்படி, பணய கைதிகளில் ஒருவரான இஸ்ரேல் ராணுவ வீராங்கனை ஆகம் பெர்ஜர் (வயது 20) என்பவரை ஹமாஸ் அமைப்பினர் இன்று விடுவித்து உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக குண்டுகளால் சேதமடைந்த கட்டிடங்கள் மீது மக்கள் திரளாக நின்றபடியும், தெருக்களில் ஒன்று கூடியும் காணப்பட்டனர்.
பெர்ஜரை, அந்த கூட்டத்தினரின் முன் ஊர்வலம்போல் அழைத்து சென்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இஸ்ரேல் அரசும், பெர்ஜர் வந்து விட்டார் என பின்னர் உறுதி செய்துள்ளது. கடத்தப்பட்ட 5 இளம் வீராங்கனைகளில் பெர்ஜரும் ஒருவர். மற்ற 4 பேர் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
Update: 2025-01-30 11:17 GMT