ஈ.சி.ஆர். சம்பவம்; பெண்களை துரத்திய இளைஞர்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025
ஈ.சி.ஆர். சம்பவம்; பெண்களை துரத்திய இளைஞர்களின் கார் பறிமுதல்
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்த விவகாரத்தில், 2-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒரு காரில் சென்றனர். அந்த காரை தி.மு.க. கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனை தொடர்ந்து, போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பெண்களை துரத்திய இளைஞர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Update: 2025-01-30 12:31 GMT