ஈரோடு: பவானியில் ஆசிட் ஏற்றிச் செல்லும் டேங்கர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
ஈரோடு: பவானியில் ஆசிட் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும்போது மயங்கி விழுந்து யுவனேந்தல் (55), சக்திவேல் (52) ஆகிய இருவர் உயிரிழந்தனர். டேங்கர் உள்ளே இறங்கி சுத்தம் செய்த மூவரும் மயங்கி விழுந்தனர். செல்லப்பன் (52) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-03-30 05:41 GMT