பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர்... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

2024-2025-ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு 11.12.2024 முதல் 09.04.2025 வரை 120 நாட்களுக்கு 9,849.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Update: 2024-12-10 15:14 GMT

Linked news