வங்காளதேசத்தை கண்டித்து 1 கி.மீ. நீள மனித சங்கிலி ... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
வங்காளதேசத்தை கண்டித்து 1 கி.மீ. நீள மனித சங்கிலி
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சபர்மதி ஆற்றங்கரையோரம் உள்ள சாலையில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு கைகோர்த்து மனித சங்கிலியை உருவாக்கினர்.
இந்து ஹீட் ரக்ஷா சமிதி என்ற அமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் இந்து மதத் தலைவர்கள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மனிதச் சங்கிலியை உருவாக்கியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஸ்வ சம்வத் கேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித சங்கிலி போராட்டத்திற்காக ஆற்றங்கரையில் கூடியிருந்த மக்களிடம் ஆர்.எஸ்.எஸ். குஜராத் பிரிவு தலைவர் பாரத் படேல் பேசும்போது, வங்காளதேச இந்துக்களுடன் ஒட்டுமொத்த இந்து சமூகமும் ஒற்றுமையாக நிற்கிறது என்றார்.