தென் மாவட்டங்களில் கனமழை: கட்டுப்பாட்டு அறையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
தென் மாவட்டங்களில் கனமழை: கட்டுப்பாட்டு அறையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்றார். அப்போது, கனமழை பெய்து வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Update: 2024-12-13 10:20 GMT