நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-02-2025

நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறும்போது, கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனால் ஒரே விசயம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். வேறெதுவும் மக்களுக்கு தருவதில்லை. ஏழைகள், சிறு வணிகர்கள், விவசாயிகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் எல்லோரும் துன்பத்தில் உள்ளனர். பணவீக்கம் பற்றி பட்ஜெட்டில் பேசுவதே இல்லை என்று கூறியுள்ளார்.

Update: 2025-02-01 05:27 GMT

Linked news