செய்தியாளர்களை இன்று சந்திக்கிறார் ராமதாஸ் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
செய்தியாளர்களை இன்று சந்திக்கிறார் ராமதாஸ்
அன்புமணி ராமதாசுடன் கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை இன்று காலை சந்திக்கிறார் . வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்த விவரங்களை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாமகவில் கட்சி நிறுவனருக்கு உள்ள அதிகாரம் குறித்து எடுத்துரைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தனது அனுமதி இல்லாமல் நடத்தப்படும் கூட்டங்களில் தனது பெயரையோ, படங்களையோ பயன்படுத்தத் தடை விதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2025-06-01 04:29 GMT